Sunday, May 20, 2007

அறிவியல் செய்திகள்

ஒவ்வொரு நாளும் அறிவியல் செய்திகளை தமிழில் அளிக்க வரும் பதிவு இது. படியுங்கள். விவாதியுங்கள். இணைந்து வளருவோம்.
இன்று: பெல்ஜியத்தை சார்ந்த அகழ்வாராய்ச்சியாளர்கள் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு எகிப்திய அரசவை பிரமுகரின் அடக்கதலத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதனை எகிப்திய கலாச்சார அமைச்சகம் தெரிவித்தது. ஹெனு எனும் இந்த அரசவை பிரமுகர் கிமு 2181-2050 காலகட்டத்தை சேர்ந்தவர் என தெரிகிறது. இக்காலம் மிகவும் அரசியல் குழப்பங்கள் சூழ்ந்த காலகட்டமாக பழங்கால எகிப்தில் இருந்தது. அனுபிஸ் மற்றும் ஓசிரிஸ் ஆகிய தெய்வங்களை நோக்கிய துதிகள் ஓவிய எழுத்துக்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதற்கான செய்தியை இங்கே காண்க: http://www.sciam.com/article.cfm?alias=belgians-find-tomb-of-anc&chanId=sa003&modsrc=reuters